இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.கடந்த ஆண்டு இந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் முன், வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.இந்நிலையில், இங்கிலாந்தில் வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்துள்ளது அந்நாட்டு அரசு. இதன்மூலம் ஜனநாயகத்தில் மக்கள் அதிகளவில் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 59.7 சதவீதம் வாக்குகளே பதிவானது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால் சுமார் 7.5 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. எனவே அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.ஏற்கனவே ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் 16 வயதுடையவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்கு செலுத்தும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.