Home » வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது – 14 நாள் விளக்கமறியல்

வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது – 14 நாள் விளக்கமறியல்

by newsteam
0 comments
வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது – 14 நாள் விளக்கமறியல்

வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (14) நள்ளிரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். எனினும் அவரிடம் இருந்து அந்த பெண் தப்பிச் சென்று தமது உறவினர்களுக்கு அறியப்படுத்திய நிலையில், பெண்ணின் உறவினர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததுடன் அவரை தேடி பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையிலேயே சந்தேகநபர் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode