Home » விமானத்தின் வால் பகுதியை கடுமையாக தாக்கிய மின்னல்

விமானத்தின் வால் பகுதியை கடுமையாக தாக்கிய மின்னல்

by newsteam
0 comments
விமானத்தின் வால் பகுதியை கடுமையாக தாக்கிய மின்னல்

பிரேசில் நாட்டின் தெற்கே சாவோ பவுலோ நகரில் கடுமையான இடி- மின்னலுடன் மழை பெய்துள்ளது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களிலேயே பெய்தது.அப்போது அங்குள்ள குவாருலோஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதனை விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து பெர்ன்ஹார்டு வார் கூறுகையில், பெரிய புயல் வீசியது. இதனால் விமானங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாங்களும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது தான் விமானத்தின் வால் பகுதியில் கடுமையாக மின்னல் தாக்கியதை வீடியோ எடுத்தேன் என்றார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!