Tuesday, March 25, 2025
Homeவிளையாட்டு செய்திஇன்று ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி நடைபெறுவதில் சந்தேகம்

இன்று ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி நடைபெறுவதில் சந்தேகம்

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. முதல் போட்டி என்பதால் பிரமாண்ட தொடக்கவிழாவும் நடைபெறவுள்ளது. தொடக்கவிழாவில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தவிருக்கிறார்.இந்த சூழலில் குறுக்கே இந்த கவுசிக் வந்த என்ன ஆகும்? என்பது போல திடீரென ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் லேசான மழைபெய்து வருகிறது. அது மட்டுமின்றி வியாழன் முதல் ஞாயிறு வரை தெற்கு வங்காளத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

அதன்படி, ஐபிஎல் 2025 இன் தொடக்க நாளான மார்ச் 22 அன்று ஆரஞ்சு எச்சரிக்கையும், ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் எச்சரிக்கையும் வெளியிடப்பட்ட காரணத்தால் நாளை மழை பெய்தால் போட்டி நடைபெறும் வாய்ப்பு சந்தேகம் தான் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொல்கத்தாவில் சனிக்கிழமை 74% மழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் 97% வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் மழைக்கான வாய்ப்பு 90% ஆக அதிகரிக்கும்.

அறிவிப்பை வைத்து பார்க்கையில், ஐபிஎல் 18வது சீசனின் தொடக்க நாளான நாளை ஈடன் கார்டன் பகுதியில் பலத்த மழை பெய்யும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மழை பெய்யவில்லை என்றால் போட்டி திட்டமிட்டபடி நடத்தப்படும். அப்படி மழை பெய்தது என்றால் தொடக்கவிழா என அனைத்தும் ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது. மேலும், ஒருவேளை மழையால் நாளை போட்டி முழுவதும் ரத்தானால், இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  புதிய தலைமுறை கழகத்தின் தலைவர் முஷாரப் முயற்சியில் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்- பாடசாலையில் கேட்போர் கூடம் நிறைவு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!