பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.வழக்கு ஒன்றில் ஷகிப் அல் ஹசன் ஆஜராகாமையினால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.3 இலட்சம் டாலர் மதிப்பிலான வங்கி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த டிசம்பர் மாதம் ஷகிப் அல் ஹசன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 19ஆம் திகதிக்குள் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உத்தரவுக்கு அமைய ஆஜராகாததால், ஷகிப் அல் ஹசனுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்கு பிடியாணை
RELATED ARTICLES