Friday, March 28, 2025
Homeவிளையாட்டு செய்திவெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த ஆர்.சி.பி

வெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த ஆர்.சி.பி

2025 ஐபிஎல் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் நேற்று(22) கோலாகலமாக ஆரம்பமானது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு செம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ரோயல் ஜெலஞ்சர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் Ajinkya Rahane அதிகபட்சமாக 56 ஓட்டங்களையும், Sunil Narine 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் ரோயல் ஜெலஞ்சர்ஸ் அணி சார்பில் Krunal Pandya 03 விக்கெட்டுக்களையும், Josh Hazlewood 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் ஜெலஞ்சர்ஸ் அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக Virat Kohli ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், Phil Salt 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2025 ஐபிஎல் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!