இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று (28) நடைபெற்ற போட்டியில் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணி 50 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.இந்தப் போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.197 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணியின் ராஜத் படிதார் 32 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்றதுடன் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
17 ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் CSK வை வீழ்த்திய RCB
RELATED ARTICLES