வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, வயதான பெண்களை சுற்றுலா விசாவில் துபாய்க்கு அனுப்பிய ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.கோட்டே பகுதியில் நடத்தப்படும் வீட்டுப் பணிப்பெண் சேவைகள் என்ற நிறுவனத்தின் மூலமே பெண்கள் பலர் சுற்றுலா வீசாக்களின் மூலம் தொழில்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.துபாயில் வீட்டு உதவியாளர் வேலைகளை வழங்குவதாக உறுதியளித்துக் குறித்த நபர், 58 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களிடம் பணம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்தநிலையில், சுற்றுலா விசாவில் துபாய்க்கு அனுப்பப்பட்ட பெண் ஒருவர் துபாயில் தொழிலைப் பெறமுடியாத நிலையில் நாடு திரும்பிய பின்னரே, முகவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையின்போது குறித்த நபர் பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்ததாகத் தெரியவந்தது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: வயதான பெண்களை சுற்றுலா விசாவில் துபாய்க்கு அனுப்பிய நபர் கைது
56