Home » வேலை செய்வதுபோல் நடிக்க சீனர்கள் கண்டுபிடித்த புதிய டெக்னிக்

வேலை செய்வதுபோல் நடிக்க சீனர்கள் கண்டுபிடித்த புதிய டெக்னிக்

by newsteam
0 comments
வேலை செய்வதுபோல் நடிக்க சீனர்கள் கண்டுபிடித்த புதிய டெக்னிக்

சீனாவில் வேலையின்மையை மறைக்க அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து சும்மா இருக்கும் போக்கு டிரெண்டாகி வருகிறது.பல பெரிய நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கின்றன. இதனால் வேலை இல்லை என்று சொன்னால் சமூகத்தில் கௌரவக் குறைச்சல், குடும்பத்தில் குறையும் மதிப்பு உள்ளிட்டவை குறித்து பயப்படுபவர்கள் இந்த யுக்தியை கண்டறிந்துள்ளனர்.அதிகரித்து வரும் வேலையின்மைக்கு மத்தியில் வேலை செய்வதுபோல் நடிக்கும் இந்த முறையை பலர் பின்பற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு 30 யுவான் [சுமார் 350 ரூபாய்] தினசரி வாடகைக்கு இதற்கென்றே அலுவலகம் போன்ற அறைகள் செயல்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
தினமும் 30 யுவான் கட்டி, காலை முதல் மாலை வரை இங்கு இருந்துவிட்டு, வேலைக்கு சென்று வந்ததுபோல் பலர் பாவலா செய்து வருகின்றனர்.வடக்கு சீனாவின் ஹெப்பி [Hebei] மாகாணத்தில் இதுபோன்ற ஒரு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ரூ.29.9 யுவான் கட்டி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு இருக்கலாம். மதிய உணவும் அவர்களுக்கு இதோடு வழங்கப்படும்.மற்றொரு வைரல் பதிவில், குடும்பத்தினருக்கு அனுப்ப, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து “பாஸ்” போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க 50 யுவான் வசூலிக்கப்படுவதாக பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!