Home » ஹெல்மெட் அணியாததால் விபரீதம்- சாலை விபத்தில் உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்

ஹெல்மெட் அணியாததால் விபரீதம்- சாலை விபத்தில் உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்

by newsteam
0 comments
ஹெல்மெட் அணியாததால் விபரீதம்- சாலை விபத்தில் உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்

ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றபோது விபத்து.கட்டுப்பாட்டை இழந்த பைக், பாலத்தின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராகுல். 27 வயதாகும் ராகுல் இன்ஸ்டா பிரபலம். ராகுலுக்கு சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.நகைச்சுவையாகவும், வேடங்கள் போட்டு வெளியிடும் வீடியோக்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.கலகலப்பான அவரது பேச்சு பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. அதற்காகவே அதிக நேரம் செலவிட்டு ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தார்.

மேலும், ராகுல் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி நேரு நகர் சேர்ந்த வேலுமணி என்பவரது மகளை திருமணம் செய்தார்.இந்நிலையில், ராகுல் நேற்று இரவு அவரது பல்சர் RS200 பைக்கில் ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், பாலத்தின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ராகுல் தூக்கி வீசப்பட்டு பைக் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில், ராகுல் தலையில் பலத்த காயமந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!