காலி மாவட்டத்தில் 1 வயது 6 மாதம் நிரம்பிய குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 65 வயதுடைய நபருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2018 ஆம் ஆண்டில், குற்றவாளி தனது அயல் வீட்டில் தாயுடன் இருந்த குழந்தையை வெளியில் அழைத்துச் செல்வதாகக் கூறி, அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.அத்துடன் , 5 இலட்ச ரூபா இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது மேலும் இழப்பீட்டை செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது.
1 வயது 6 மாத குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 65 வயதான நபருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை
114