Home » 10 மாத ஆண் குழந்தையை செய்த கொலை தாய்

10 மாத ஆண் குழந்தையை செய்த கொலை தாய்

by newsteam
0 comments
10 மாத ஆண் குழந்தையை செய்த தாய்

ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது.புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இது ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச் செயல் தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவ தினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை எனவும், அன்றிரவு (16) குழந்தையை வீட்டிற்கு பின்னால் உள்ள தண்ணீர் குழிக்குள் வீசி பின்னர் குழந்தையை மீட்டு, வீட்டின் கட்டிலில் வைத்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!