Home » 17 சுயேட்சைக் குழுக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய தமிழ் ஒன்றியம் அங்குரப்பணம்

17 சுயேட்சைக் குழுக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய தமிழ் ஒன்றியம் அங்குரப்பணம்

by newsteam
0 comments
17 சுயேட்சைக் குழுக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய தமிழ் ஒன்றியம் அங்குரப்பணம்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட 17 சுயேட்சைக்குழுக்களை ஒன்றிணைத்து ஐக்கிய தமிழர் ஒன்றியம் இன்று சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அங்குரப்பணம் செய்யப்பட்டது.அங்குராப்பண நிகழ்வு தொடர்பில் சுயேச்சை குழு 12இன் முதன்மை வேட்பாளர் சிறீந்திரன் கருத்து தெரிவிக்கையில்,தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய தலைமைகளின் அதிர்த்தி நிலை காரணமாக தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது. இந்நிலை எதிர்காலத்தில் தவிர்க்கப்படுவதற்காக கடந்த பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சை குழுக்களாக போட்டியிட்ட 17 சுயேச்சை குழுக்களின் முதன்மை வேட்பாளர் ஒன்றிணைந்து ஐக்கிய தமிழர் ஒன்றியமாக அங்குராப்பணம் செய்து உள்ளோம்.

தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார இலக்குகளை முன்வைத்து எமது பயணம் முன்னோக்கிக் செல்லும் என்றார்.சுயேட்சை குழு 15 இல் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர் செந்தில்மதி கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் எதிர்பார்த்த இலக்குகளை தமிழ் தேசிய அரசியல்வாதிகள் செய்யவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. இதன் காரணமாக சுயேச்சை குழுக்களாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தரப்புகளை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்காலத்தில் சிதற டிக்காமல் மக்கள் பலத்தினை காட்டுவதற்காக ஒன்றிணைந்துள்ளோம்.யாழ். தேர்தல் தொகுதியில் முதற்கட்டமாக 17 சுயேச்சை குழுக்களை ஒன்றிணைத்து எமது பயணத்தை ஆரம்பித்து உள்ள நிலையில் வடமாகாணம் கிழக்கு மாகாணம், மலைகயம் மற்றும் கொழும்பை ஒன்றிணைத்து ஐக்கிய தமிழர் ஒன்றியமாக எமது செயற்பாடுகள் விரிவுபடுத்த உள்ளோம்
எமது இந்த அமைப்பில் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் இல 1793 கே.கே.எஸ் வீதி, கோண்டாவில் மேற்கு கோண்டாவில் என்ற முகவரியில் அமைந்துள்ள எமது அலுவலகத்தில் தொடர்புகொள்ள முடியும் என்றார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!