Friday, August 8, 2025
Homeஇலங்கை1996ல் இந்தியாவுக்குச் சென்ற தம்பதிகள், யாழ். விமான நிலையத்தில் கைது

1996ல் இந்தியாவுக்குச் சென்ற தம்பதிகள், யாழ். விமான நிலையத்தில் கைது

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்த கணவன் மற்றும் மனைவி நேற்று(7) புதன்கிழமை விமான நிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.இண்டிகோ விமானம் 6E 1177 சென்னையில் இருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த தம்பதிகள் 1996 ஆம் ஆண்டு தலை மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு படகு மூலம் பயணம் செய்து தமிழ்நாட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இவ்வாறான நிலையில் விமான மூலம் அவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.கைதான இருவரும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய குடி வரவு குடிவரவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:  வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தர் - ஆளுநர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!