Home » 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் தாய்லாந்துக்கு

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் தாய்லாந்துக்கு

by newsteam
0 comments
2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் தாய்லாந்துக்கு

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார்.72வது உலக அழகி போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றுது. இந்த ஆண்டு, 108 போட்டியாளர்கள் உலக அழகி போட்டியில் பங்கேற்கின்றதுடன், அவர்கள் 4 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் இலங்கை சார்பாகப் போட்டியிட்ட அனுதி குணசேகர, இறுதி 40 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்திருந்தார்.
அதன்படி, இலங்கையின் உலக அழகி எதிர்பார்ப்பு தகர்ந்தது.72வது உலக அழகி போட்டியில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் அனுதி குணசேகர சிறப்பான செயல்திறனைக் காட்ட முடிந்ததுடன், அவர் நேரடியாகவும் மற்றும் மல்டிமீடியா பிரிவுகளிலும் இறுதிச் சுற்றுகளுக்குத் தகுதி பெற முடிந்தது.
நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக அந்தப் பிரிவுகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இலங்கைப் போட்டியாளர் என்ற பெருமையையும் அனுதி குணசேகர பெற்றார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!