Site icon Taminews|Lankanews|Breackingnews

30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நகரும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நகரும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என அறியப்படும் A23a சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நகர்வும் இல்லாமல் ஒரே இடத்திலிருந்த நிலையில் தற்போது மீண்டும் நகர ஆரம்பித்துள்ளது.லண்டனில் உள்ள கிரேட்டர் லண்டன் நகரை விட இருமடங்கு பெரிய அளவில் சுமார் ஒரு டிரில்லியன் டன் எடையுள்ள இந்த பனிப்பாறை , 1986ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிக்கட்டியிலிருந்து உடைந்தது. அன்றிலிருந்து, வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் கடலின் அடிப்பகுதி சேற்றில் சிக்கிக் கொண்டது.இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இந்த பனிப்பாறை வடக்கு நோக்கி மெதுவாக நகர ஆரம்பித்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தெற்குப் பெருங்கடலுக்குள் அண்டார்டிக் சர்க்கம்போலார் என்ற நீரோட்டத்தைப் பின்தொடர்ந்து இந்த பனிப்பாறை நகரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த பனிப்பாறை ஜோர்ஜியாவின் தெற்குப் பகுதியை அண்மித்துள்ள துணை அண்டார்டிக் தீவை நோக்கி நகரும் என்றும் அங்கு வெப்பமான நீருடன் சந்திக்கும் A23a பனிப்பாறை இறுதியில் சிறிய பனிப்பாறைகளாக உடைந்து பின்னர் உருகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version