Home » 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

by newsteam
0 comments
40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் தலமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலிலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இனைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது பரந்தன் பகுதியில் வைத்து ஒருவரும் முழங்காவில் பகுதியில் வைத்து நால்வருமாக 5 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!