Site icon Taminews|Lankanews|Breackingnews

55 வயதில் 31-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த நபர்

55 வயதில் 31-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த நபர்

நேபாள நாட்டின் ஷெர்பா இனத்தை சேர்ந்த பழங்குடியினர் இமயமலையில் வாழும் பழமையான இனக்குழுவாகும். இன்றளவும் இவர்களே எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டிகளாக செல்கிறார்கள்.அப்படி மலையேற்ற வழிகாட்டியான காமி ரீட்டா என்ற நேபாளி, எவரெஸ்ட் மலையேற்றத்தில் 31-வது முறையாக சிகரம் தொட்டு புதிய சாதனை படைத்து இருக்கிறார். 55 வயதான அவர், நேற்று அதிகாலை 4 மணிக்கு எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். இதன் மூலம் அவர் 31-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததுடன், தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார்.இந்த முறை அவர், லெப்டினன்ட் கர்னல் மனோஜ் ஜோஷி தலைமையிலான இந்திய ராணுவ சாகசப் பிரிவு வீரர்களை மலையேற்றத்தில் வழிநடத்திச் சென்றார்.

Exit mobile version