Home » 6 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது

6 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது

by newsteam
0 comments
6 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது

பதுளை – மடுல்சீமை பகுதியில் தமது 6 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ள நிலையில், அவர் தமது தந்தையின் கண்காணிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
குறித்த சிறுமி பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என தெரிவித்து சிறுவர் மற்றும் மகளிர் பணிக்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தமது தந்தையால் தாம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் குறித்த சிறுமி கூறினார் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.இதனையடுத்து, சந்தேகநபரான தந்தை நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதுடன்.இன்றைய தினம் பசறை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.குறித்த சிறுமி தற்போது பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!