ஜூலை 2025-ன் முதல் ஞாயிறு தினமான இன்று, சூரியனின் ஆதிக்கம் நிறைந்து காணப்படும் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். சூரியனின் ஆதிக்கம், ஒவ்வொரு ராசியின் மீது தனித்துவமான தாக்கத்தை உண்டாக்குகிறது. ஒரு சில ராசியினருக்கு நற்பலன்களையும், ஒரு சில ராசியினருக்கு சவால்கள் நிறைந்த வாழ்க்கையையும் கொண்டு வருகிறது. அந்த வரிசையில், இன்று எந்தெந்த ராசிக்கு சாதகமான தினமாக இருக்கும்? எந்த ராசிக்கு மோசமான தினமாக இருக்கும் என விரிவாக பார்க்கலாம்!
மேஷம்
ஆற்றல் மிக்க மேஷ ராசியினருக்கு இன்று தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகள் நீங்குவதோடு, போதுமான லாபத்தையும் காண்பார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்றைய தினம் இரண்டாவது பாதியில், உங்கள் நணபர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மண வாழ்க்கையை பொறுத்தவரையில் மகிழ்ச்சி நீடிக்கும், காதல் உறவில் காணப்பட மனஸ்தாபங்கள் மறைந்து, இணக்கம் உண்டாகும்
ரிஷபம்
ரிஷப ராசியினர் இன்று தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காணும் நாள். நீண்ட நாட்களாக குழம்பி தவித்த சந்தேகங்களுக்கு, பதிலை கண்டறிவார்கள். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய தினமாக இன்று அமையும். எதிர்காலத்திற்கு தேவையான நிதிகளை சேமிப்பது எப்படி என சிந்திக்க துவங்குவீர்கள். புதிய தொழில்களை தொடங்குவதற்கான வழியை கண்டறிவீர்கள். குடும்பத்தினர் ஆதரவு இருக்கும் நிலையில், சவால்கள் நிறைந்த விஷயங்களை தைரியமாக முயற்சித்து அதில் வெற்றியும் காண்பீர்கள்
மிதுனம்
மிதுன ராசியினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும் நாளாக இன்று அமையும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள், உங்களுக்கு வர வேண்டிய பணங்களும் தடை இன்றி வரும். வியாபாரத்தில் போதுமான வருமானம் கிடைக்கும், சூரியனின் பார்வை உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்யும். பணியிடத்தில் அலைச்சல் நிறைந்த தினமாக இன்று அமையும், எனவே உங்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் வழியே நல்ல செய்திகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியினரின் நிதி நிலை மேம்படும் நாளாக இன்று பார்க்கப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க விரும்பும் நபர்கள், இன்று அதற்கான பணிகளை துவங்கலாம். வங்கியில் விரைவாக செயல்முறைகள் முடிந்து, கூடிய விரைவில் பணத்தை கடனாக பெறுவீர்கள்.வீட்டில் நேர்மறை ஆற்றல் சூழ்ந்திருக்கும், இதன் தாக்கம் குடும்ப உறவுகள் மத்தியில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்றைய தினம் வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர விஷயங்களுக்கு செலவழிப்பதை தவிர்த்து, அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் பணத்தை செலவு செய்வது தல்லது!
சிம்மம்
ஆற்றல் மிக்க சிம்ம ராசியினர் இன்று தங்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக குடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகலாம். பிரச்சனைகளை தவிர்க்க ஆரோக்கிய உணவு வழக்கத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் வாழ்வின் முக்கியமான நபர் ஒருவரை நீங்கள் இன்று சந்திக்கலாம்.இந்த சந்திப்பு நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கலாம். குடும்ப உறவுகளை பொறுத்தவரையில் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும். காதல் உறவில் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியினர் இன்று தங்கள் சக ஊழியர்களிடம் இருந்து தங்களை பாதுக்காத்து கொள்வது நல்லது. பணியிடத்தில் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க சூழ்ச்சிகள் பல நடக்கும், இந்த சூழ்ச்சிகளில் இருந்து உங்களை தற்காத்துக்கொள்ள முயற்சியுங்கள். தொழில்முனைவோர், தங்கள் நண்பர் உதவியுடன் தொழிலை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்வார்கள். தொழில் வளர்ச்சிக்கு தேவையான பண உதவிகள் உறவினர்கள் வழியே கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் இன்று உங்களின் பக்க பலமாக இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இன்று நிதி நெருக்கடி நிறைந்த தாளாக இருக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், அலைச்சலும் அதிகமாகவே இருக்கும். நண்பர்கள் உடன் நிற்பார்கள், அவர்களின் ஆதரவு உங்களுக்கு உத்வேகமாக இருக்கும். சவால்கள் நிறைந்த தினமாக இன்று இருக்கும் நிலையிலும், தன்னம்பிக்கையை கைவிடாது முயற்சிப்பது சவால்களை எதிர்த்து போராட உதவும். மண வாழ்க்கையை பொறுத்தவரையில் ஆறுதலான ஒரு தினமாக இன்று இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை உங்கள் கஷ்டங்களை பகிர்ந்துக்கொள்வார்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இன்று லாபகரமான தினமாக இருக்கும். வியாபாரத்தில் கிடைக்கும் போதுமான வருமானம், உங்கள் ஆடம்பர தேவைகளையும் பூர்த்தி செய்யும். இருப்பினும், உங்கள் நண்பர் ஒருவர் இன்று பெரிய தொகையை கடனாக கேட்கலாம்.பணத்தை அளிக்க மறுக்கும் பட்சத்தில் நட்புறவில் விரிசல் உண்டாகும். குடும்ப உறவுகள் உங்கள் முன் முயற்சிக்கு ஆதரவாக இருக்கும். குடும்ப தொழிலை எடுத்து நடத்த உடன் பிறந்தவர்கள் முன் வருவார்கள். உங்கள் பாரத்தை பகுதியாக குறைப்பார்கள்.
தனுசு
செய்யும் காரியங்களில் சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கும் தனுசு ராசிக்காரர்கள், இன்று அதீத ஆற்றலுடன் காணப்படுவார்கள். விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான ஒரு தினமாக இன்று அமையும். உலோகம் சார்ந்த தொழில் செய்யும் நபர்கள் இன்று கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.காதல் வாழ்க்கை, வாக்குவாதம் நிறைந்த தினமாக இருக்கும். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடிக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள், வியாபாரத்தில் போதுமான வருமானம் கிடைக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான காரியங்கள் அனைத்தும் தானே இன்று நடக்கும்!
மகரம்
மகர ராசியினரின் பொருளாதார நிலை இன்று சிறப்பாக இருக்கும்; அதேநேரம், உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளால் செலவுகளும் அதிகமாகும். எதிர்பாராத விபத்துக்கள் காரணாமக, மருத்துவமனைக்கு அதிகம் செலவழிக்க வேண்டிய சூழல் உண்டாகலாம். வாகனத்தை இயக்கும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.முடிந்தளவுக்கு வெளியூர் பயணங்களை இன்று தவிர்ப்பது நல்லது. குடும்ப தொழிலில் போதுமான லாபம் கிடைக்கும். குடும்ப உறவுகளுடன் இன்று நேரம் அதிகம் செலவிடுங்கள். குறிப்பாக, குழந்தைகளுடன் நேரம் அதிகம் செலவிட, அவர்களின் மனநிலையை புரிந்துக்கொள்ள உதவும்.
கும்பம்
கும்ப ராசியினர் இன்று தங்கள் உணவு வழக்கத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தினம். உணவு ஒவ்வாமை, செரிமான சிக்கல் போன்ற குடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். எனவே, உண்ணும் உணவில் கவனம் செலுத்துவது நல்லது. ஆடம்பர செலவுகளை இன்று குறைத்துக்கொள்வது நல்லது, ஆடம்பர பொருட்களுக்காக செய்யும் செலவுகள் வங்கி சேமிப்பை பாதிக்கும்.கடன் வாங்குவது, அறிமுகம் இல்லா இடத்தில் முதலீடு செய்வது, அத்தியாவசியம் இல்லா பொருட்களை வாங்குவது போன்றவை கூடாது. காதல் வாழ்க்கை பொறுத்தவரையில் உங்கள் காதல் துணை இன்று உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளிப்பார்; தயாராக இருங்கள்!
மீனம்
எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்து செய்யக்கூடியவர்கள் மீன ராசியினர். இருப்பினும், இன்று இவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்து பதற்றத்துடன் செய்யக்கூடிய வகையில் இருக்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பதோடு, பதற்றத்தை குறைப்பதும் அவசியம். சிறு தொழில் செய்யும் நபர்களுக்கு சிறப்பான ஒரு தினமாக இன்று அமையும். குடும்ப உறவுகளின் உதவி, தொழிலை வளர்ப்பதற்கு வழிவகை செய்யும். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.