Wednesday, January 8, 2025
Homeஇந்தியாபோதையில் மூதாட்டியை பலாத்காரம் செய்த நபர் கைது

போதையில் மூதாட்டியை பலாத்காரம் செய்த நபர் கைது

தமிழ்நாடு தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, ஓசூர் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.இவர் கடந்த 31ம் தேதி இரவு, ஓசூர் பஸ் நிலையத்தில் இருந்த போது, 35 வயது வாலிபர், கெலமங்கலம் செல்வதாகவும், டூவீலரில் அழைத்து சென்று விடுவதாகவும் கூறினார்.
இதை நம்பிய மூதாட்டி, அவருடன் சென்றார். வழியில், பேரண்டப்பள்ளி வனப்பகுதி அருகே, மூதாட்டியை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினார்.

மூதாட்டியின் அழுகுரல் கேட்டு அப்பகுதியினர் அவரை மீட்டனர்.கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஓசூர் டவுன் அனைத்து மகளிர் பொலிசார், சிசிடிவி கெமராக்களை ஆய்வு செய்ததில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது, ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உளியாளத்தை சேர்ந்த லட்சுமணன்(35) என்பது தெரியவந்தது.அவரை பொலிஸார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் போதையில் மூதாட்டியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தப்பித்து ஓட முயன்ற லட்சுமணன், கீழே விழுந்ததில் வலது கால் முறிந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments