இன்று செப்டம்பர் 26, வெள்ளிக் கிழமை புரட்டாசி 10ம் தேதி நன்னாளில் சந்திர பகவான் துலாம், விருச்சிகத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இன்று கிரகங்களின் மாற்றம் காரணமாகவும், சூரியன் – புதன் சேர்க்கையால் புதாதித்ய யோகம் உருவாகிறது. இன்று மீனம், மேஷத்தில் உள்ள ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும். இன்று உங்கள் புகழ் அதிகரிக்க கூடிய நாள். குடும்பப் பொறுப்புக்கள், வேலை என அதிக வேலைப்பளுவை சந்திக்க வாய்ப்பு உண்டு. அதனால் எந்த வேலைகளை முதலில் முடிக்க வேண்டும் என்ற திட்டமிடல் தேவை. உங்களுடைய நிதி நிலைமை மேம்படுத்துவதற்காக கடினமாக உழைக்க வேண்டியதாக இருக்கும்.நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று புதிதாக தொழிலில் உள்ளது வியாபாரம் தொடங்குவதற்கு சாதகமான நாளாக இருக்காது. அதனால் சற்று சிந்தித்து செயல்படவும். இன்று உங்கள் வேலையை வேகமாக முடிக்க முடியும். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முயற்சி செய்யவும். குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இன்று உங்களுடைய நிதிநிலை ஓரளவு மனதிடத்தை தரும். மாணவர்கள் தங்களுடைய கடின உழைப்பிற்கான பலனை பெறுவார்கள்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில்நுட்பத் துறையிலும், அறிவு சார்ந்த வேலைகளிலும் சிறப்பாக செயல்படுவார்கள். இந்த குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். இது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். குடும்பத்தில் நடக்கக்கூடிய வாக்குவாதங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இன்று உங்கள் தந்தையின் உடல் நலம் குறித்து சற்று கவலை ஏற்படும். உங்களுடைய நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கடக ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும். இது உங்கள் மன அமைதியை மேம்படுத்தும். மாணவர்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய தொழில் தொடர்பான தடைகள் நீங்கும். தொழிலில் செழிப்பும். வலுவான நிதி நிதி நிலையும் ஏற்படும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும். இன்று உங்கள் மனதில் அமைதி மேம்படும். மாணவர்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பாக ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்களுக்கு சாதகமான சூழலை காண்பார்கள். தொழில் தொடர்பாக இந்த தடைகள் நீங்க வாய்ப்பு உண்டு. உங்கள் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு வேலையை வேகமாக முடிக்க உதவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு வேலை மற்றும் வணிகம் தொடர்பாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இன்று எதிரிகளை எளிதாக சமாளிக்க முடியும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். முக்கிய வேலைகளை முடிப்பதில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பு தொடர்பாக கடின உழைப்பும் அலைச்சலும் சந்திக்க நேரிடும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு கடின உழைப்பு மற்றும் பரபரப்பாக செயல்பட வேண்டிய நாளாக அமையும். இன்று இன்று உங்கள் கடின உழைப்பிற்கான பலன் குறைவாகவே கிடைக்கும். இன்று உங்களுடைய செலவுகள் அதிகரிக்க கூடிய நாள்.அதனால் தேவையற்ற மன அழுத்தம் சந்திக்க வாய்ப்பு உண்டு. உங்கள் வேலையை முடிக்க அலைச்சல் அதிகரிக்கும். மாலை நேரத்தில் சிறிது நிவாரணம் எதிர்பார்க்கலாம். இன்று உங்களுடைய குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு மற்றவர்கள் மூலம் சில நல்ல விஷயங்கள் நடக்கும். உங்கள் வேலையில் தந்தையின் ஆலோசனை ஆதரவாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் உறவு சமூகமாக இருக்கும்.இன்று உங்களுடைய தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையை முடிப்பதில் சாதகமான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் இன்று மாலை நேரத்தில் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளின் செயல்பாடு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உடல் அசௌகரியங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று நிதிநிலை தொடர்பான நன்மைகள் தெரிவீர்கள். வீட்டின் செல்வ நிலை மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று உங்கள் துணைக்கு பரிசுகள் வழங்க நினைப்பீர்கள். இன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட நிதி சுமை அதிகமாக இருக்கும்.
மகர ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பெற்றோரை சந்திப்பதற்கும், அவர்களுடன் நேரத்தை செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆசிர்வாதம் கிடைக்கும். சிலருக்கு பதிவு உயர்வுக்கான நல்ல வாய்ப்புகள் உண்டு. சொத்து தொடர்பான விஷயங்களில் இன்று தீர்வுகள் கிடைக்கும். உங்களுடைய நிலுவையில் உள்ள வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். இன்று உடல் ஆரோக்கியம் சற்று சிரமம் தரக்கூடியதாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் உறுப்பினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோர், பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கையில் சிறப்பான வாய்ப்புகளை ஏற்படுத்தும். சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் கோபம் ஏற்படலாம். இன்று உங்கள் செயல்பாடுகளில் நிதானம் தேவை. இன்று ஏதேனும் ஒரு வழியில் இருந்து பணம் வரவு பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இது உங்களின் நிதிநிலை வலுவாக்க உதவும். இன்று வீட்டிலும் சமூகத்திலும் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும்.
மீன ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு தொழிலில் செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். இன்று உங்கள் எதிர்காலமும் குறித்த சிந்தனையில் ஈடுபடுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் அமைய வாய்ப்பு உண்டு. இன்று உங்களது எதிரிகளுடன் எச்சரிக்கையாக இருக்கவும். இன்று புதிதாக ஏதேனும் ஒரு விஷயங்களை கற்க அல்லது தொடங்குவதற்கான நல்ல வா சூழல் நிலவும். இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும்.