இலங்கை கடற்படையினரால் நேற்று (28) இலங்கை – நெடுந்தீவு அருகே கைதுசெய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களிடமிருந்து மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு படகும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு கடற் படையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் இல்லத்தில் நேற்று மாலை ஆஜர் படுத்தப்படபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 12 பேரும் விளக்கமறியலில்
12
previous post