முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பேருந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பத்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் பேருந்தில் பயணித்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக அறியமுடிகின்றது.
அவ்வாறு விபத்தில் காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்திசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.மேலும் இந்த விபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டுசுட்டானில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பேருந்து விபத்து
11