மன்னார் நகரசபை எல்லைக்குள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கிய ஒரு வெதுப்பகம் உட்பட மூன்று உணவகங்களுக்கு எதிராக, நகரசபை சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (30) மன்னார் பொது வைத்தியசாலையைச் சுற்றியுள்ள உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில், மன்னார் நகரசபை சுகாதாரப் பரிசோதகர் மற்றும் சுகாதாரக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்போது, சுகாதார நடைமுறைகளை மீறிய உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.பின்வரும் மீறல்கள் கண்டறியப்பட்டன:
உரிய அனுமதியின்றி இயங்கிய உணவகங்கள்.
கழிவுநீர் உரிய முறையில் அகற்றப்படாத வெதுப்பகம்.
மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் பணிபுரிந்த ஊழியர்கள்.
அதிகளவு இளையான்கள் (பூச்சிகள்) இருந்தமை.
சுகாதாரமற்ற முறையில் உணவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை.
இந்த மீறல்களின் அடிப்படையில், குறித்த உணவகங்களுக்கு எதிராக இன்று (02) மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.