14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், இளைஞன் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை குறித்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மொரவௌ பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், தமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான 14 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில், காவல்துறையின் துரித இலக்கமான 119 மற்றும் சிறுவர் நன்னடத்தைகள் திணைக்களம் போன்றவற்றிற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த மொரவௌ காவல்துறையினர், பாதிக்கப்பட்ட மாணவியை சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக, திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அத்துடன், வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில், இன்று இடம்பெற்ற போது, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் 14 வயது சிறுமி மீது துஷ்பிரயோகம் – இளைஞன் விளக்கமறியல்
10