Home » தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருட்டு – பொலிஸார் விசாரணை

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருட்டு – பொலிஸார் விசாரணை

by newsteam
0 comments
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருட்டு – பொலிஸார் விசாரணை

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை இந்த பறவைகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பறவைகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து புறாக்கள் திருடப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்குப் பொருட்களாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் புறாக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையாக மிருகக்காட்சிசாலையில் பறவைகள் வைக்கப்பட்டிருந்த பிரிவின் பொறுப்பதிகாரியை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர மேலும் தெரிவித்தார். இருப்பினும், இந்தத் திருட்டில் ஈடுபட்ட நபர் அல்லது திருடப்பட்ட புறாக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விடயம் குறித்து தெஹிவளை பொலிஸாரும் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!