கண்டி, கம்பளை, தொலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நான்கு பெண்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நான்கு பெண்களும் சமய வழிபாடு நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்காக வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டி – கம்பளை சாலை விபத்தில் மூன்று பெண்கள் பலி, ஒருவருக்கு காயம்
16
previous post