டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை அமெரிக்க நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன.டிரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப், அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றார்.அவர் வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். டிரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.இந்த நிலையில் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை அமெரிக்க நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.8 கோடியே 58 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளது.இதே போல உலக புகழ் பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனமும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை அளித்துள்ளது.