இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது.கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலை 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, CAPSTAN மற்றும் John Player சிகரெட்டுகளின் விலை 5 ரூபாவாலும் மற்றும் dunhill மற்றும் Gold Leaf சிகரெட்டுகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.இதேவேளை, நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மனுபானங்களின் விலைகளை 6 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.