Sunday, January 12, 2025
Homeஉலகம்லொஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ - பலத்த காற்றினால் தீப்பரவல் மேலும் அதிகரிக்கும் என அச்சம்

லொஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ – பலத்த காற்றினால் தீப்பரவல் மேலும் அதிகரிக்கும் என அச்சம்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸை அச்சுறுத்தி வரும் காட்டுத்தீ, நகரின் மிகவும் பிரத்தியேகமான பகுதியொன்றுக்குப் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளைத் தீயணைப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த காட்டுத் தீப்பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு, எரியும் மலைகளில் தண்ணீர் மற்றும் தீயணைப்பான்கள் வீசப்பட்டு வருகின்றன.இந்த தீப்பரவல் சுமார் 23,000 ஏக்கர் பரப்பளவில் விரிவடைந்து, தற்போது, லொஸ் ஏஞ்சல்ஸின் புறநகரான பிரெண்ட்வுட் பகுதியை அடையும் நிலையில் உள்ளது.

பலத்த காற்று மீண்டும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால் காட்டுத் தீப்பரவல் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.காட்டுத் தீ பரவல் காரணமாக அமெரிக்காவில் இதுவரையில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன், சுமார் 153,000 குடியிருப்பாளர்கள் கட்டாய வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷியா.. இலவசமாக வழங்க இருப்பதாக அறிவிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!