இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த யுவதி அதேபகுதியில் வசிக்கும் 19 வயது இளைஞன் ஒருவருடன் காதல் உறவிலிருந்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.இதற்குக் குறித்த யுவதியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தமையினால் குறித்த இளைஞர் தமது நண்பருடன் யுவதியின் வீட்டிற்குச் சென்று அவரை கடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் நீதவான் முன்னிலையில் நேற்றுபிரசன்னப்படுத்தப்பட்டனர்.அதன்போது, கைதுசெய்யப்பட்ட யுவதியின் காதலன் எனக் கூறப்படும் இளைஞர் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய இளைஞர் 17 வயதுடையவர் என்பதால் அவரை நன்னடத்தை இல்லத்துக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.