Thursday, January 16, 2025
Homeஇந்தியாஆந்திரா கோழி சண்டையில் ரூ.1.20 கோடி வென்ற சேவல்

ஆந்திரா கோழி சண்டையில் ரூ.1.20 கோடி வென்ற சேவல்

சேவல் சண்டை நடந்த இடங்களில் கண்ணாடிகளை உடைத்து காரில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.கடந்த 3 நாட்களில் ரூ. 1,500 கோடிக்கு சண்டையில் பந்தயம் நடந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.ஆந்திராவில், சங்கராந்தி பண்டிகையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக சேவல் பந்தயம் நடந்தது. பாரம்பரியமான சேவல் சண்டை காண்பதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குவிந்தனர்.பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக பவுன்சர்கள் மற்றும் பெண் பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.ஆண்கள் மட்டுமின்றி இளம் பெண்களும் சேவல் மீது பந்தயம் கட்டினர். சில பெண்கள் காய்கறி வாங்கும் பைகளில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்து பந்தயத்தில் ஈடுபட்டனர். சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ. 50 லட்சத்தை பந்தயம் கட்டி இழந்தார். பின்னர் சூதாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் ரூ 5 லட்சத்தை வென்றார். அமலாபுரத்தில் நடந்த பந்தயத்தில் சேவல் ஒன்று ரூ.1.20 கோடியை வென்று அசத்தியது.

பேரா வலி அடுத்த கந்தவள்ளியில் நடந்த சேவல் பந்தயத்தை காண வந்த வாலிபர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் சேவல் பந்தயத்தில் பணத்தை இழந்ததால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.அங்கிருந்தவர்கள் வாலிபரை மீட்டு தனது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சேவல் சண்டை நடந்த இடங்களில் கடந்த 3 நாட்களாக மதுபான கடைகள் இரவு பகல் பாராமல் திறந்து இருந்தனர்.இதனால் மது மற்றும் மாமிச விருந்து நடந்தது.மேலும் சிலர் பெண்களை அழைத்து வந்து குத்தாட்டம் நடத்தினர். தெலுங்கானாவை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் சேவல் பந்தயம் நடத்தும் அமைப்பாளர்கள் தன்னிடம் ரூ.7 லட்சத்தை மோசடி செய்ததாக ராம புறப்பாடு போலீசில் புகார் செய்தார்.
சேவல் சண்டை நடந்த இடங்களில் கண்ணாடிகளை உடைத்து காரில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 நாட்களில் ரூ. 1,500 கோடிக்கு சண்டையில் பந்தயம் நடந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:  மாணவரால் மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!