யாழ்ப்பாணம் – குருநகரில் இன்று (19) காலை வீசிய பலத்த காற்றினால் வீடுகள் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்ததுள்ளது.இந்நிலையில் குறித்த பகுதிக்கு விஜயம் சென்ற யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் சேத நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.இதேவேளை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.