கேரளாவில் மலை மற்றும் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளதால் அங்கு யானைகளின் எண்ணிக்கையும் அதிகம். அதனால் கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.கேரளாவில் யானைகள் அதிகம் உள்ளதால் அடிக்கடி அவை மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.அவ்வகையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி பகுதியில் குழந்தையுடன் பைக்கில் சென்ற ஒரு தம்பதியை காட்டு யானை துரத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் நல்வாய்ப்பாக குழந்தையுடன் பைக்கில் சென்ற அந்த தம்பதி யானையிடம் சிக்காமல் பத்திரமாக தப்பித்து சென்றுள்ளனர்.இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.