யாழ்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகப் போக்குவரத்து மற்றும் தண்டனைக் கோவை சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை அறிவித்துள்ளது. அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் வைத்து நேற்று அதிகாலை இராமநாதன் அர்ச்சுனா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக அவரது வாகனத்தை நிறுத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கடுஞ்சொற்களைப் பிரயோகித்திருந்தார்.
சம்பவ இடத்தில் அர்ச்சுனா போக்குவரத்து விதிகள் மற்றும் தண்டனைக்கோவைச் சட்டத்தில் 22 ஆம் சரத்தின் கீழும் குற்றம் இழைத்தவர் என உறுதியாகி இருப்பதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில், அனுராதபுரம் காவல்துறையினர் நீதிமன்றுக்கு விளக்கமளித்து அதனடிப்படையில் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.