யாழ்ப்பாணம் வெண்புரவிநகரின் கரையோரப் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் வெள்ளரிகளை கொண்டு சென்ற 02 பேரை 2025 ஜனவரி 20 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தேடுதல் நடவடிக்கையில் ஒரு டிங்கி படகு மற்றும் 130 கடல் வெள்ளரிகள் கைப்பற்றப்பட்டன.பொறுப்பற்ற மீன்பிடி நடைமுறைகளை பொருட்படுத்தாத மக்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக, தீவின் கரையோர மற்றும் கடல் பகுதிகளில் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக, வடக்கு கடற்படை கட்டளையில் SLNS கஞ்சதேவா சிறிய கப்பல்களை அனுப்பியதன் மூலம் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தது. வென்புரவிநகர் கரையோரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை இடைமறித்த போது, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி 130 கடல் வெள்ளரிகளை இடமாற்றம் செய்த 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34 மற்றும் 45 வயதுடைய அல்லைப்பிட்டியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த 02 சந்தேக நபர்களும் கடல் வெள்ளரிகள் மற்றும் டிங்கி படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வேலனி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.