Wednesday, January 22, 2025
Homeவிளையாட்டு செய்திஹர்திக் பாண்டியாவுக்கு முக்கிய பொறுப்பு

ஹர்திக் பாண்டியாவுக்கு முக்கிய பொறுப்பு

இந்திய கிரிக்கெட் அணியில் அணி தலைவராக ஹர்திக் பாண்டியா இல்லை என்றாலும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக டி20 அணி தலைவர் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று (22) கொல்கத்தாவில் இருந்து ஆரம்பமாகிறது.இந்த தொடரில் இந்திய அணியின் துணை அணி தலைவராக அக்சர் பட்டேல் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியா தான் அடுத்த அணி தலைவர் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நீக்கப்பட்டு சூரியகுமார் யாதவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.நான் சரியாக விளையாடாததால் தான் சாம்பியன்ஸ் டிராபியில் சேர்க்கப்படவில்லை என சூர்யகுமார் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த சூரியகுமார் யாதவ், எனக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. நாங்கள் மும்பை அணிக்காக 2018 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக தான் விளையாடுகிறோம். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் மும்பை அணியில் எப்படி இருந்தேனோ, அதேபோல் தான் தற்போதும் இருக்கின்றேன். தற்போது எனக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஐபிஎல் போன்ற தொடரில் விளையாடும்போது நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்பேன். ஆனால் இங்கு பொறுப்புகள் அதிகம். நானும் ஹர்திக் பாண்டியாவும் களத்திற்கு உள்ளேவும் வெளியவும் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம்.

நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து இந்திய அணியை முன்னோக்கி கொண்டு செல்வோம். இதேபோன்று அக்சர் பட்டேலுக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் 2024 டி20 உலக கிண்ணத்தில் எவ்வாறு செயல்பட்டார் என்று அனைவருக்குமே தெரியும். அவரும் நீண்ட காலமாக இந்திய அணியில் இருக்கின்றார். ஹர்திக் பாண்டியாவுக்கு அணி தலைவர் பதவி இல்லை என்றாலும் அவரும் அணியில் முக்கிய பொறுப்பு வகிக்கின்றார்.எங்கள் அணியின் நிர்வாகக் குழுவில் ஹர்திக் இருப்பார். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தான் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசித்து முடிவு எடுப்போம். களத்திலும் சரி, களத்திற்கு வெளியில் சரி ஹர்திக் பாண்டியா எங்களுடன் தான் இருப்பார். எங்களுடைய அணியில் பல அணி தலைவர்கள் களத்தில் இருக்கிறார்கள். கே கே ஆர் அணியில் கம்பீருக்கு கீழ் நான் நான்கு ஆண்டுகள் விளையாடிருக்கிறேன். கம்பீர் எவ்வாறு செயல்படுவார் என்று எனக்கு நன்றாக தெரியும்.

அவர் எங்களிடம் பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர் என்ன நினைக்கிறார் என்பதை நாங்கள் அதை செய்வோம். கம்பீர் ஒரு பயிற்சியாளராக எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார். வீரர்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்த அவர் அனுமதி அளிப்பார். அவர் எப்போதுமே சிம்பிளாக இருப்பார். ஒரு வீரரின் மனதில் என்ன ஓடுகிறது என்று அவருக்கு நன்றாக தெரியும். அணியின் நல்ல சூழலை உருவாக்க வேண்டும் என்று கம்பீர் நினைப்பார் என சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  முதியவர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பணமோசடி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!