மருதானை காவல்நிலைய சிறைக்கூடத்தில் பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.வவுனியாவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த பெண் நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.