திருகோணமலை பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவனுக்கும் பசுமலை பிரதேசத்தில் உள்ள மாணவிக்கும் Tiktok மூலம் காதல் மலர்ந்துள்ளது.இதையடுத்து குறித்த இளைஞன் தனது காதலியை தேடி பசுமலை பிரதேசத்துக்கு வருகை தந்து மாணவியின் வீட்டுக்குச் சென்றுள்ளான்.சம்பவம் குறித்து பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.