வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 ஆம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறச்சியுடன் வாகனம் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.இதன் போது குறித்த பட்டா ரக வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய சமயத்தில் கொள்கலன்களில் 128 கிலோ மாட்டிறச்சியினை முறையற்ற முறையில் கொண்டு சென்றமை உட்பட்ட குற்றச்செயல்களில் குறித்த வாகனத்தினை பொலிஸார் கையப்படுத்தினமையுடன் வாகனத்தின் சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களின் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கையப்படுத்தப்பட்ட 128 கிலோ மாட்டிறச்சி உட்பட பட்டா ரக வாகனம் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய மேலதிக நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.