Home » தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக எம்.என்.எம்.யஸீர் அறபாத் சத்தியப்பிரமாணம்

தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக எம்.என்.எம்.யஸீர் அறபாத் சத்தியப்பிரமாணம்

by newsteam
0 comments
தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக எம்.என்.எம்.யஸீர் அறபாத் சத்தியப்பிரமாணம்

மாவடிச்சேனை, பஸீர் வீதியைச்சேர்ந்த முஹம்மது நஸீர் முஹம்மது யஸீர் அறபாத் தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக இன்று (28) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஷீல் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரியும், மாவடிச்சேனை மஸ்ஜித் மஸீத் ஸாலிஹ் அல் மஸீத் பள்ளிவாயலின் செயலாளரும் பத்தி எழுத்தாளரும் இளம் சமூகச்செயற்பாட்டாளருமாவார்.மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) என்பவற்றின் பழைய மாணவரான இவர் முஹம்மது நஸீர், மர்ஹுமா பாத்திமா தம்பதிகளின் புதல்வருமாவார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!