வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூரிய ஆயுதம் ஒன்றினால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வீரகெட்டிய, மொரயாய பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்து தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.