சாவகச்சேரி, கச்சாய் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 80 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் பொலிஸ் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையின் போது 500 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணிடம் இருந்து 87 கிலோ 616 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நபர், கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவராவார்.சந்தேகநபர் தனது மகனுடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அதற்காக போதைப் பொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.