யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் இன்று சுதந்திர தின விழா சிறப்பிக்கப்பட்டது.செம்பியன் பற்று வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இன்று காலை 9மணி அளவில் கிராம உத்தியோகத்தரால் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழா சிறப்பிக்கப்பட்டது.குறித்த விழாவில் கிராம உத்தியோகத்தர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களால் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தை சுற்றி சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.