நேற்றிரவு (17) மெல்சிறிபுர பன்லியத்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தும் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மேலும் 08 பேர் காயமடைந்துள்ளனர்.மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தின் சாரதியே விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெல்சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.