கணவன்,மனைவிக்கு இடையே வாக்குவாதம் - மனைவியின் மூக்கை அறுத்த கணவன்

தனது தாய் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று மனைவி கூறியதை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் கணவன் தனது மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்தோய், பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவரே தனது மனைவியின் மூக்கை அறுத்துள்ளார். ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிடத் தனது தாயின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என அவரது மனைவி கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் மனைவியின் மூக்கை அறுத்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தனது கணவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here