யாழ். மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பாக சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் தெரிவிக்கையில்,ஏற்கனவே இருந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டு அவை தற்போது மீளப் பொருத்தப்பட்டிருக்கின்றன.அதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் வளி மாசுபடுதலின் தன்மைகள் குறித்து அவதானிக்கப்பட்டு அவர்களால் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிது என்றார்.