கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவரது ஐம்பதாயிரம் ரூபா பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. இவ்வாறு கொள்ளையடித்த, ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு.கொஸ்தாவின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.