அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடெல்ல பிரதேசத்தில் கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற சந்தேக நபரொருவர் இன்று திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வாகனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர் ஆவார்.சந்தேக நபரிடமிருந்து 23 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.